14.03.2023 ( செவ்வாய் கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2023

14.03.2023 ( செவ்வாய் கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 14.03.2023 ( செவ்வாய் கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

14.03.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மே திங்கள் இரண்டாவது சனிக்கிழமை ( 13.05.2023 ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 ( Under Negotiable Instruments Act 1881 ) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 14.03.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு , தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி