பிளஸ் 1 தேர்வு வேதியியலில் பிழை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 29, 2023

பிளஸ் 1 தேர்வு வேதியியலில் பிழை

பிளஸ் 1 வேதியியல் தேர்வில் இரண்டு மதிப்பெண் வினாவில் வார்த்தை பிழை இடம் பெற்றதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.


'ஐசோடோப்புகள் என்றால் என்ன' கேள்வியில் 'ஐசோடோப்பு' என்பதற்கு அருகில் 'மாற்றியங்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தன. ஐசோடோப்புகள் என்பது மாற்றியங்கள் கிடையாது. மாற்றியங்கள் என்பது 'ஐசோமெரிசம்' என அழைக்கப்படும்.


பிளஸ் 1 பாட புத்தகத்தில் ஐசோடோப்புகள் குறித்த பாடம் நான்காவதாகவும் மாற்றியங்கள் குறித்த பாடம் 11வதாகவும் உள்ளது. தேர்வில் இரண்டு பாடங்களின் வார்த்தைகளையும் கலந்து கேள்வி கேட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.


ஏற்கனவே பிளஸ் 1 பாட புத்தகத்தில் ஐசோடோப்பு குறித்த பயிற்சி வினாவில் மாற்றியம் என பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பிழையை திருத்தாமல் விட்டதால் பொது தேர்விலும் அதே வார்த்தை பிழையுடன் கேள்வி இடம் பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி