ஆசிரியர்களுக்கு டேப் மற்றும் ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2023

ஆசிரியர்களுக்கு டேப் மற்றும் ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

 

ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். அந்த வகையில்,



* அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும்.

* மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை மெருகேற்றிக் கொள்ள ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.

* அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

* அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

* உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.

* கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுதும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* பள்ளிகளில் நடைபெற்ற கலை திருவிழாவில் 25 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

* கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

* படிப்புத் திறனும், படைப்பு திறனும் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

* மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி