பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு டிப்ஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2023

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு டிப்ஸ்

 

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு, நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:  

நீங்கள் நாளைக்கு தேர்வு எழுத செல்லும்போது, உங்கள் அம்மா, அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கி புறப்படுங்கள். புறப்படும் போது, ஒரு பேனாவுக்கு பதில் 2 பேனா, 1 பென்சிலுக்கு பதில் 2 பென்சில் எடுத்து செல்லுங்கள். தேர்வுக்கு செல்லும் போது, மோட்டார் பைக் மற்றும் கார், பஸ்சில் செல்லும்போது அவசர அவசரமாக படிக்காதீர்கள். கடைசி ஒரு மணி நேரத்தில் படிக்கும் போது, நமக்கு பயம் அதிகமாகும்.  கேள்விகளை நன்றாக படித்து பார்த்து பதில் எழுதுங்கள்.  கடினமான கேள்விகளை விட்டுவிடுங்கள். அதன் பிறகு தெரியாத கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் எழுதுங்கள். அதிலும், ஒரு கேள்விஅதிக கடினமாக இருக்கிறது என்றால், அதை எழுதாதீர்கள்; அதை விட்டுவிட்டு மற்ற கேள்விகளுக்கு செல்லுங்கள். எல்லா கேள்விகளையும் முடித்த பிறகு உங்களுக்கு நேரம் இருக்கிறது. இப்போது இரண்டரை மணி நேரம் தான் ஆகியுள்ளது என்றால், உடனே அறையை விட்டு வெளியே வராதீர்கள். அந்த அரை மணி நேரத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்து இருக்கிறோமா. அவை, சரியா அல்லது கூடுதலாக ஏதாவது சேர்க்க வேண்டுமா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.


அப்படி 3 மணி நேரமும் தேர்வு எழுதி முடித்த பிறகு வெளியே வர வேண்டும். வெளியே வந்த பிறகு தேர்வு சரியாக எழுதி இருக்கிறோமா. தவறாக எழுதி இருக்கிறோமா என்று புத்தகத்தை திறந்து பார்த்து சரி பார்ப்பது, எவ்வளவு மார்க் நமக்கு கிடைக்கும் என்பதை பற்றி எல்லாம் சிந்திக்காதீர்கள். நேராக வீட்டிற்கு போய், ஒரு மணி நேரம் நல்லா ஓய்வு எடுங்க.  அதுக்கு பிறகு அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள். தீவிரமாக படிக்க தொடங்குங்கள். அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுங்கள். உங்கள் அனைவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள். நிறைய மார்க்குகள் உங்களுக்கு கிடைக்கட்டும். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி