வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்: 5 மாணவ மாணவிகள் 5 நாள் இடைநீக்கம்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2023

வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்: 5 மாணவ மாணவிகள் 5 நாள் இடைநீக்கம்.!

 

தருமபுரி மாவட்டம் அமனி மல்லபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவ மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே, மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை நாற்காலிகளை உடைத்து ஐந்து மாணவ மாணவிகள் அட்டகாசம் செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இந்த நிலையில், மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்த 5 மாணவ மாணவிகள் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார். மாணவ மாணவிகளின் பெற்றோர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை 5 மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2 comments:

  1. Ayyo nanga bayandhutom, periya punishment

    ReplyDelete
  2. என்ன கேவலம்... அந்த மாணவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்க தக்கது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி