பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2023

பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலக வளாகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை, 6 எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. எரிசக்தி துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், போக்குவரத்து, பொதுப்பணி, தொழில் முதலீடு, கைத்தறி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறை சார்ந்த விஷயங்கள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட வருகிறது.

9 comments:

  1. ஒரு மண்ணும் இருக்காது..!

    ReplyDelete
    Replies
    1. அப்ப கூட டளபதிக்கு தான் எங்க ஓட்டு பார்லிமென்ட் எலெக்ஷன்ல... இப்படிக்கு பிதுங்காம அழுத்தம் கொடுப்போர் சங்கம் 😄😄😄

      Delete
  2. குரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்கல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க

    ReplyDelete
    Replies
    1. சூட்சுமத்த வெளிய சொல்லாதய்யா 😄😄

      Delete
  3. கடந்த ஆட்சிபோல் இல்லாமல் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 10 ஆண்டு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்குங்கள் ஐயா!

    ReplyDelete
  4. காலை வணக்கம் மு.க ஸ்டாலின் அவர்களே நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் ஒன்று பகுதி நேர ஆசிரியர்களை "பணி நிரந்தரம்" செய்க (அல்லது) ஊதியத்தை உயர்த்தி தாருங்கள்.கொரோனா,,நிதி நிலை எல்லாம் காரணம் காட்டாதீர் நீங்களெல்லாம் என்ன ஜென்மம்."தெய்வங்கள்" இன்னும் உங்களை எல்லாம் விட்டு வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்."தெய்வங்கள்"இருக்கிறார்கள் இதற்கான தீர்ப்பு என்றைக்கு தரஜபோகிறார்கள் என்று தெரியவில்லை.உங்களை குற்றம் சொல்வதற்கு சொல்லவில்லை கொஞ்சமாவது மனம் உறுத்தலோடு செயல் படுங்கள்.இதில் பெண்களும் பாதிக்கபட்ட உள்ளோம் எல்லா பெண்களுக்கும் விடிவு கிடைக்கவில்லை.முதலில் ஒழுக்கமானவரை அரசியலில் ஈடுபட செய்ய வேண்டும்.

    ReplyDelete
  5. Stalin dha vararu appu vaika poraru

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி