தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2023

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு..!!

 

தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017, 20 மட்டும் 22 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு 8,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 2017ல் சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், பழங்குடியினர் நல இயக்குனர் அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், துறையின் கீழ் செயல்படக்கூடிய தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய 221 ஆசிரியர்கள் மற்றும் நிரப்பப்பட உள்ள 194 பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக வரக்கூடிய 415 தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு இடைநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியருக்கு 15 ஆயிரம் ரூபாயும், முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு 18 ஆயிரம் ரூபாயும் என சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று தற்போது திருத்தப்பட்ட ஊதியம் என்பது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படக்கூடிய ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது தெரிவித்திருக்கிறது. இதுவரை இந்த பள்ளிகளில் 221 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். புதிதாக 194 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர். மொத்தமாக 415 தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்த்தி வழங்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

8 comments:

 1. சம்பளம் சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் எடுத்துக்கொண்டு மீதி தொகை கொடுக்கிறார்

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் ஏழைகள், வறுமை கோட்டில் வாழ்பவர்கள்

   Delete
  2. Avan eduthutu kudukkurathukum oruthan andha velaiku poran paru... Avan than kedu ketta jenmam.

   Delete
 2. குரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்கல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க

  ReplyDelete
 3. யோ வளர்ந்துக்கெட்ட முதல்வனே பகுதி நேர ஆசிரியருக்கு ஊதிய உயர்வாது செய்யவும்.தெய்வங்கள்"பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி நிரப்பி ஒவ்வொரு ஆட்டையும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் கடத்தியது போல் நீங்களும் செய்து தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது போன்று நடந்து கொள்ளாதீர்கள் ஐயா. நீங்கள் வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம் என்பதை மறவாதீர்.

  ReplyDelete
 5. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி நிரப்பி ஒவ்வொரு ஆண்டையும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் கடத்தியது போல் நீங்களும் செய்து தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது போன்று நடந்து கொள்ளாதீர்கள் ஐயா. நீங்கள் வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம் என்பதை மறவாதீர்.

  ReplyDelete

 6. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி நிரப்பி ஒவ்வொரு ஆட்டையும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் கடத்தியது போல் நீங்களும் செய்து தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது போன்று நடந்து கொள்ளாதீர்கள் ஐயா. நீங்கள் வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம் என்பதை மறவாதீர்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி