ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்து, இன்று கருத்து கேட்பு கூட்டம் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2023

ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்து, இன்று கருத்து கேட்பு கூட்டம் !

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்து, இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.


அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக, 2009 ஆகஸ்ட் 1க்கு முன் நியமிக்கப்பட்டோருக்கும், அதற்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கும் சமமான ஊதியம் வழங்க, இடைநிலை ஆசிரியர் பதிவுமூப்பு இயக்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.


இதுகுறித்து, அரசு தரப்பில் பேச்சு நடத்தி, சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஆய்வு செய்ய, அரசின் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டது.


கமிட்டி சார்பில், பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, இன்று ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளார்.


தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பிரதிநிதிகள், இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி