பகுதி நேர ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2023

பகுதி நேர ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி, பள்ளிக்கல்வி வளாகத்தில், 6ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுகின்றனர்.


ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, தொழிற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களை, இவர்கள் கற்பிக்கின்றனர்.


பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கீதா தலைமையில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்றும் இவர்கள், காத்திருப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


பள்ளிக்கல்வி அதிகாரிகள், நேற்று பேச்சு நடத்தி, கோரிக்கை மனு பெற்றுள்ளனர். முதல்வரின் கவனத்துக்கு கோரிக்கைகளை எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

3 comments:

  1. தேர்வு ஏதும் எழுதாமல் தற்காலிக பணியில் சேர்ந்து பணிநிரந்தரம் கேட்கிறார்கள்.. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்கள் காத்திருந்து பணி வழங்க போராடினால் ஒரு சில பரதேசிகள் இது தகுதி தேர்வு மட்டுமே என்கிறார்கள் இது என்னங்கடா நியாயம்...

    ReplyDelete
  2. unknown
    March 9, 2023 at 4:56 AM
    குரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்ல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க.

    ReplyDelete
  3. "தெய்வங்கள்" வந்தால் தான் அநீதிக்கு ஒரு நீதி கிடைக்கும்😭😭😭😭😭

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி