அண்ணா பல்கலை. இணைப்பு அங்கீகாரம்: ஏப்.17-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 10, 2023

அண்ணா பல்கலை. இணைப்பு அங்கீகாரம்: ஏப்.17-க்குள் விண்ணப்பிக்கலாம்

 

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலை. மூலம் புதுப்பிக்க வேண்டும்.


2023-24 கல்வியாண்டுக்கான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பிக்க கல்லூரிகள் கடந்த ஜனவரி முதல் விண்ணப்பித்து வருகின்றன. தனியார் கல்லூரிகள் ஏப்.17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை ஏப்.17-ம் தேதிக்குள் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.


இந்த வாய்ப்பை தவறவிடும் கல்வி நிறுவனங்கள், அபராதக் கட்டணம் செலுத்தி ஏப்.24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி