பி.டெக். படிப்பு நுழைவு தேர்வு தொடக்கம்: ஏப்.26-ல் முடிவு வெளியாகி அன்றே ஆன்லைன் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2023

பி.டெக். படிப்பு நுழைவு தேர்வு தொடக்கம்: ஏப்.26-ல் முடிவு வெளியாகி அன்றே ஆன்லைன் கலந்தாய்வு

 

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புக்கான கணினி வழி நுழைவுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் வரும் 26-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.


விஐடியில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ‘விஐடிஇஇஇ-2023’ நேற்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை கணினி வழியாக நடைபெறுகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகள் என மொத்தம் 125 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. விஐடி வேலூர் வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வை வேந்தர் கோ.விசுவநாதன், பெங்களூரு மையத்தில் நடைபெற்ற தேர்வை விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பார்வையிட்டனர்.


இதன் முடிவுகள் ஏப்.26-ம் தேதி www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.


முதற் கட்ட கலந்தாய்வு (26-4-2023 முதல் 30-4-2023) தரவரிசை 1 முதல் 20,000 வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு (9-5-2023 முதல் 11-5-2023) தரவரிசை 20,001 முதல் 45,000 வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு (20-5-2023 முதல் 22-5-2023) தரவரிசை 45,001 முதல் 70,000 வரையும், நான்காம் கட்ட கலந்தாய்வு (31-5-2023 முதல் 2-6-2023) தரவரிசை 70,001 முதல் 1 லட்சம் வரையும் நடைபெறும். ஐந்தாம் கட்ட கலந்தாய்வு (12-6-2023 முதல் 14-6-2023) தரவரிசை 1 லட்சத்துக்கு மேல் நடைபெறும். தரவரிசை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபால் வளாகத்தில் மட்டுமே படிக்க இடம் கிடைக்கும்.


கல்வி கட்டண சலுகை: ஜி.வி. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு விஐடி பல்கலையில் பி.டெக். படிப்பு காலம் முழுவதும் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும், விஐடி நுழைவுத்தேர்வில் தரவரிசையில் முதல் 50 இடங்களில் தகுதி பெறுபவர்களுக்கு 75 சதவீதம், தரவரிசை 51 முதல் 100-க்குள் தகுதி பெறும் மாணவர்களுக்கு 50 சதவீதம், தரவரிசை 101 முதல் 1,000-க்குள் தகுதி பெறும் மாணவர்களுக்கு 25 சதவீதம் கல்வி கட்டண சலுகை 4 ஆண்டு காலம் முழுவதும் வழங்கப்படும்.


அதேபோல், தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் விஐடியில் உயர்கல்வி படிக்கும் வகையில் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு கட்டணத்தில் முழு சலுகை, உணவு, விடுதி வசதியுடன் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

1 comment:

  1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோள்.02/06/1962 க்குப்பிறகு பிறந்து ஆசிரியர் பணியில் சேர்ந்து 02/06/2022 அன்று ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு முந்தைய அரசால் மறுக்கப்பட்ட மறுநியமன காலத்தை அக்கல்வி ஆண்டில் மே 31 வரை அரசாணை எண்:115/நாள்:28/06/2022 ன் படி பணியாற்றி மே 31/2023 அன்று ஓய்வு பெற உள்ள நிலையில் திடீரென்று ஏப்ரல் 30/2023 பனியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளார்கள் என்ற செய்தி பரவலாகப் பரவி வருகிறது.உரிய நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி