காலை 7.30 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் ! பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் அறிவிப்பு !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2023

காலை 7.30 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் ! பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் அறிவிப்பு !!

பஞ்சாபில் மே 2-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் இயங்கும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறி யிருப்பதாவது: பஞ்சாபில் மின் நுகர்வு மதியம் 1.30 மணிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்குகிறது. அரசு அலுவலங்களை மதியம் 2 மணிக்கு மூடினால், மின் நுகர்வு அதிகரிப்பதை 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க முடியும். இதுகுறித்து அரசு ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பஞ்சாப் அரசு அலுவலகங்கள் தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.


இந்த பணி நேரத்தை மே 2-ம் தேதி முதல் காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்ற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் ஜூலை 15-ம் தேதி வரை அமலில் இருக்கும். அரசு அலுவலகங்களில் செய்யப்படும் இந்த பணி நேர மாற்றத்தால், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிப்பை குறைக்க முடியும். நானும் எனது அலுவலகத்துக்கு காலை 7.30 மணிக்கு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி