ஜாக்டோ ஜியோவுக்கு நாங்கள் போட்டியில்லை - தினமலர் நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2023

ஜாக்டோ ஜியோவுக்கு நாங்கள் போட்டியில்லை - தினமலர் நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு!!

 'புதிதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஜாக்டோ ஜியோவுக்கு போட்டியான அமைப்பில்லை' என, அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.


இந்த அமைப்பு போல, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாகி உள்ளது. இது குறித்து, நம் நாளிதழில் ( தினமலர் ) நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, புதிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:


ஏற்கனவே, ஜாக்டோ ஜியோவில் உள்ள எட்டு ஆசிரியர் அமைப்புகள் இணைந்து, தனி குழுவாக செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று தான், 19 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஆசிரியர் கூட்டமைப்பாக உருவாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்பது, ஜாக்டோ ஜியோவுக்கு எதிரானதோ, மாற்றானதோ இல்லை. ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. இப்படி ஜாதி வாரியா கட்சி வாரியா உயரம் வாரியா கலர் வாரியா சங்கங்கள் எண்ணிக்கைய கூட்டிட்டே போங்க 😄😄😄 கோரிக்கை மட்டும் நிறைவேறவே கூடாது...

    ReplyDelete
  2. அப்படினா ஜாக்டோ ஜியோவோட சேர்ந்து குரல் கொடுக்கப்போறீங்க............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி