சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கல்வி அமைச்சர் இன்று காலமானார்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2023

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கல்வி அமைச்சர் இன்று காலமானார்!!!

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் பாதிப்படைந்தது.


இதனால் சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜகர்நாத் மஹ்தோ. ராஞ்சியில் இருந்து விமானம் மூலம் ஜகர்நாத் மஹ்தோவை முதல்வர் ஹேமந்த் சோரன் சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தார். சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர்.


இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ காலமாகிவிட்டார் என தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் புலி எனவும் ஜகர்நாத் மஹ்தோவுக்கு ஹேமந்த் சோரன் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

4 comments:

 1. நான் கூட ......அமைச்சரோ னு நினைச்சேன்....!

  ReplyDelete
 2. அடப்பாவி இவந்தான் பூட்டானு நெனச்சேன்

  ReplyDelete
 3. தலைப்பை சரியா போடுங்கடா நான் எவ்வளவு சந்தோஷத்துல உள்ள வந்தா
  ஜார்க்கண்ட் அமைச்சர் போய் கொன்றிருக்காங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி