11.04.2023 கோட்டை முற்றுகை - ஜாக்டோ-ஜியோ செய்தி அறிக்கை - 06.04.2023 - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 6, 2023

11.04.2023 கோட்டை முற்றுகை - ஜாக்டோ-ஜியோ செய்தி அறிக்கை - 06.04.2023

எங்கள் நியாயமான கோரிக்கைகளை , திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கழக ஆட்சி வந்ததும் நிறைவேற்றித் தருவதாக எங்கள் மாநாடுகளிலும் தேர்தல் அறிக்கையிலும் உறுதியளித்துள்ளதை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் உள்ளதையும் அரசுத்துறைகளில் ஆறுலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதையும் எடுத்துக்கூறி உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 11.04.2023 அன்று நேரடியாக முதல்வரை சந்தித்து நினைவூட்டல் செய்ய இருக்கிறோம்.

 அரசும் , காவல்துறையும் அனுமதி மறுக்கும்பட்சத்தில் கோட்டையை முற்றுகையிட்டு முறையிட உள்ளோம் எங்களுடைய இருபது ஆண்டுகால நிலுவை கோரிக்கைகளின்பால் உடனடியாக நடவடிக்கை எடுத்து , திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவற்றில் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளையாவது உடனடியாக நிறைவேற்றித் தர செய்தி ஊடகங்களிலும் , நாளிதழ்களிலும் தாங்கள் எங்களுக்காக அழுத்தமாக குரலெழுப்ப வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Jactto-geo Press News 06.04.2023 - Download here...


3 comments:

  1. Jacto jio vaaal government in oru aaniyum pudunga mudiyaaathu..... Because ungala ellam government oru poruttave nenaikala....

    ReplyDelete
  2. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு 31/05/2023ல் ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களின் வேண்டுகோள்.02/06/1962 க்குப்பிறகு பிறந்து ஆசிரியர் பணியில் சேர்ந்து 02/06/2022 அன்று ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு முந்தைய அரசால் மறுக்கப்பட்ட மறுநியமன காலத்தை தங்கள் அரசால் மாணவர்களின் நலன் கருதி அக்கல்வி ஆண்டில் மே 31 வரை பணியாற்ற அரசாணை எண்:115/நாள்:28/06/2022 ன் படி அனுமதித்தீர்கள்.அவ்வாறு பணியாற்றி மே 31/2023 அன்று ஓய்வு பெற உள்ள நிலையில் திடீரென்று ஏப்ரல் 30/2023 பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளார்கள் என்ற செய்தி பரவலாகப் பரவி வருகிறது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்,பள்ளி ஆண்டு இறுதித்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு ,மாணவர்கள் சேர்க்கை ஆகிய பணிகள் இருக்கும் நிலையில் பணியிலிருந்து விடுவிப்பது முற்றிலும் அப்பணிகள் பாதிக்கும்.உரிய நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டுகிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி