ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட் நிறங்களுக்கும் உள்ள வெவ்வேறு அர்த்தங்கள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 23, 2023

ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட் நிறங்களுக்கும் உள்ள வெவ்வேறு அர்த்தங்கள்

 

நம் நாட்டிலிருந்து, வேறு நாடுகளுக்குச் சென்று வர பாஸ்போர்ட் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதை கவனத்திருக்கிறீர்களா?


பாஸ்போர்ட்கள் நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு போன்ற பல வண்ணங்களில் இருக்கின்றன. அவை பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்கள் எப்படி இருக்க வேண்டும், அதில் என்ன வகையான எழுத்து அளவு இருக்க வேண்டும், என்பதற்கு தான் விதிமுறைகள் விதிக்கின்றனவே ஒழிய பாஸ்போர்ட் எந்தெந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு International Civil Aviation Organization (ICAO) எந்த விதிமுறைகளையும் விதிப்பதில்லை.


மேலும் பாஸ்போர்ட் நிறங்களை அந்தந்த நாடுகளே நிர்ணயிக்கின்றன. பாஸ்போர்ட்டின் நிறம் அதனுடைய மதிப்பை குறிப்பிடுவதல்ல, அவை ஒரு நாட்டின் அரசியல், மத, வரலாற்று, மற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பச்சை நிற பாஸ்போர்ட்:


நம்பிக்கையைக் குறிக்கிறது; பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் பச்சை நிற பாஸ்போர்ட்டுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அது இறைத்தூதர், முஹமதிற்கு பிடித்த நிறமாம். அது மட்டுமல்லாது, குர்ஆனில் பச்சை நிறத்தின் புனிதத்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பச்சை நிற பாஸ்போர்ட்டுகள் இருப்பதைக் காணலாம்.


சிகப்பு நிற பாஸ்போர்ட்டுகள்:


உலகில் பெரும்பாலும் உபயோகிக்கப்படும் பாஸ்போர்ட்டுகள் சிவப்பு நிறம், கிறிஸ்தவ மதத்தை குறிப்பிடுவதாகும். மேலும் அங்குள்ள வரலாற்றில் இடம்பெற்ற 'வைகிங்' இன மக்களைக் குறிப்பிடும் வகையில் இது இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் உறுப்பு நாடுகள் அனைத்தும், இந்த சிவப்பு நிற பாஸ்போர்ட்டுகளை பெரும்பாலும் உபயோகிக்கின்றன. மேலும் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் நாடுகளும் தங்களது பாஸ்போர்ட்டை சிவப்பு நிறத்தில் மாற்றி வருகின்றன.

வரலாற்றில், கம்யூனிஸ்ட் நாடுகளான ரஷ்யா போன்ற நாடுகளும் இந்த வண்ணப் பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றன.


நீல நிற பாஸ்போர்ட்டுகள்:


இது, 'ஒரு புதிய உலகு' என்ற பொருளைக் குறிக்கிறது. சிவப்பு வண்ணத்திற்குப் பிறகு நீல நிற பாஸ்போர்ட்டுகளே, உலகில் மிகவும் அதிகம் பயன்படுத்துபவை. மதிப்பிற்குரிய ஆவணங்கள் நீல நிறத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் கொண்டுள்ளனர். மேலும் அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பெராகுவே, போன்ற நாடுகளிலும் இந்த வண்ண பாஸ்போர்ட்டுகள் பயன்பாட்டில் உள்ளன


கருப்பு நிற பாஸ்போர்ட்டுகள்:


இவை உலகில் மிகச் சில இடங்களிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இவை மலாவி, டஜ்கஸ்தான் குடியரசு, போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். நியூசிலாந்தில், அவர்களது பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிறப் பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.


நமது நாட்டில்


இந்தியாவில், ஆரஞ்சு, வெள்ளை, மற்றும் கருஞ்சிவப்பு நிற பாஸ்போர்ட்டுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றில், கருஞ்சிவப்பு நிறம் அரசு முறை பயணங்களுக்கும் ஆரஞ்சு நிறங்கள் வேலை தேடிச் செல்வோருக்கும் வழங்கப்படுகிறது. மேலும் சாதாரணமாக நீல நிற பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.


ஒரு நாட்டின் பண்பாட்டுக் கூறுகளையும் அவர்களின் அடையாளங்களும் அந்தந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளிலிருந்தே வெளிப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி