SSC தேர்வுகளும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2023

SSC தேர்வுகளும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

 

சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 


மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 


மேற்குறிப்பிட்ட இரு தேர்வுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் இனி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வருகிற மே 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 


முன்னதாக சி.ஆர்.பி.எப். தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
    அன்பு நண்பர்களுக்கு வணக்கம் நீங்கள் வேலை தேடும் ஒரு நபராக இருந்தால் மேற்கண்ட லிங்கை கிளிக் செய்யவும். இந்த தளத்தில் தினமும் அரசு மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு செய்திகள் பதிவு செய்யபடுகின்றன. படித்து பயன் பெறவும் நன்றி!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி