தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 18, 2023

தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

3 மாதத்துக்குள் தமிழக்கத்தில் 54 துறைகளில் பணி மூப்பு பணிகளை தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவு.


தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி மூப்பு (பதவி உயர்வு) வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் இருக்கும் 54 துறையிலும், தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு (பணி மூப்பு) வழங்க வேண்டும் என்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதை அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசு உறுதி செய்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


எனவே, 2023 மார்ச் 10ல் இருந்து தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணி மூப்பு வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

 1. திராவிடமும் இட ஒதுக்கீடும் என்ன ஆவது 🤔🤔🤔

  ReplyDelete
 2. அப்போ முன்னாடி Promotion ல ponavangalukku exam வைங்க... Pass agalanna increment cut pannunga

  ReplyDelete
 3. government and private jobs
  Dear Friends, Greetings to all of you! Here is my Website, Government and private sector job news are posted daily. So I request you to kindly visit this site daily thanks.

  ReplyDelete
 4. ஊருக்குத்தான் உபதேசம் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தகுதி தேர்வு என்றால் ஐயோ பொய்யோ என அலர் அடித்துக் கொண்டு அந்த ஆணையை ரத்து செய்வதும் ஏற்றுக்கொள்ளாமல் முரண்பிடிப்பதும் ஆனால் மற்றவர்களுக்கு என்றால் தகுதி தராதரம் என பல்வேறு அளவுகளை நிர்ணயித்து அடக்குமுறை செய்வது. ஏற்கனவே அரசு பணிகள் அனைத்தும் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறது அப்படி இருக்கும் பொழுது அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு தேர்வு என்றால் மன்னிக்கவும் தகுதி மற்றும் மதிப்பெண் என்றால் அதில் என்ன முறைகேடு நடக்கும் என்பது யாவரும் அறிந்தது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி