10ம் வகுப்பு தமிழில் 36,000 பேர் தோல்வி: அவசர நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 20, 2023

10ம் வகுப்பு தமிழில் 36,000 பேர் தோல்வி: அவசர நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. 9.14 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 8.35 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக மாணவியர்,94.66 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


ஆனாலும், தாய்மொழியான தமிழில் ஒருத்தர் கூட, 'சென்டம்' மதிப்பெண் எடுக்கவில்லை; மாறாக, 36 ஆயிரம் பேர், தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். அவசரகவனம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள், ஏப்ரல் 6ல் துவங்கி, 20 வரைநடந்தன. விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


இந்தத் தேர்வில், தமிழில் 100க்கு 100 மதிப்பெண் யாரும் எடுக்கவில்லை. மாறாக, 36ஆயிரம் பேர், தமிழில் தேர்ச்சி பெறவில்லை.


பிளஸ் 2வில் இரண்டு மாணவியர் மட்டும்,தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். ஆனால், 10ம் வகுப்பு பொது தேர்வில், தமிழில் யாரும்சென்டம் எடுக்கவில்லை.


அதிகபட்சமாக கணிதத்தில், 3,649 பேர் சென்டம் பெற்றுள்ளனர். அறிவியல்,3,584, சமூக அறிவியல், 320 மற்றும் ஆங்கிலத்தில், 89 சதவீதம் பேர், 100க்கு 100 மதிப்பெண்கள்பெற்றுள்ளனர்.


தமிழ் மற்றும் பிற மொழி பாடங்களில், 95.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


ஆங்கிலம், 98.93;கணிதம், 95.54; அறிவியல், 95.75 மற்றும் சமூக அறிவியலில், 95.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் உள்ளிட்ட தாய்மொழி பாடத்தில், 4.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.


தேர்ச்சி பெறாதவர்களில் 4 சதவீதம் பேர் வரை, அதாவது மொத்தம், 9.14 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 8.73 லட்சம்பேர் மட்டும், மொழி பாடங்களில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.


இவர்களில், 36 ஆயிரம் பேர் தமிழை விருப்ப மொழி பாடமாக எடுத்தவர்கள்; மற்றவர்கள் பிற மாநில மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.


மற்ற பாடங்களை விட, ஆங்கிலத்தில் அதிக தேர்ச்சி கிடைத்துள்ளது. மொத்தம் 9.04 லட்சம் பேர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, தாய்மொழி பாடங்களை விட, ஆங்கிலத்தில், 31 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கடந்த 2022ம் ஆண்டில், 9.12 லட்சம் பேர் 10ம் வகுப்பு தேர்வுஎழுதினர்.


அவர்களில், 8.65லட்சம் பேர் மட்டும் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றனர்; 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை.


ஒரே ஒரு மாணவியாக, துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில வழி மாணவி துர்கா, தமிழில், 100க்கு 100 'சென்டம்' எடுத்துள்ளார்.

4 comments:

 1. Centum edukkalana unakku enna da prachanai

  ReplyDelete
 2. விரைவில் குழுக்கள் அமைத்து சரிசெய்யப்படும்

  ReplyDelete
 3. தமிழ்நாட்டிலே தமிழை காப்பபாற்ற முடியவில்லை பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால் இனி தமிழ் மெல்ல அழிந்துவிடும்

  ReplyDelete
  Replies
  1. முதலில், நீங்கள் தமிழை சரியாக எழுத கற்று கொள்ளுங்கள் ஐயா. பின்பு, எங்களை குறை சொல்லலாம். காப்பாற்ற என்ற இடத்தில் எழுத்து பிழை உள்ளது. ஆங்கில மோகத்தில் இருப்பது அரசு ஊழியர்கள் தான்.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி