1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2023

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.


எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஒரேடியாக வகுப்புகள் நடத்தாமல், மாதத்தில் ஒரு சனிக்கிழமை அல்லது இரண்டு சனிக்கிழமை வீதம் வகுப்புகள் நடத்தப்பட்டு நாட்கள் ஈடு செய்யப்படும்” என தெரிவித்தார்.

3 comments:

  1. தனியார் பள்ளி ஆசிரியர்கள்
    ( மே 18 வரை சிறப்பு வகுப்புகள்) மே மாதம் முழுக்க மட்டுமல்லாமல் வருடம் தோறும் கொத்தடிமைகளாக வேலை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம்... தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையும் குறைவு , வேலைப்பளுவும் அதிகம்...
    இது பற்றி அமைச்சர் அவர்களுக்கு சிறு துளியும் தெரியாதா? மனம் நொந்து கூறுகிறேன்..
    அடுத்து திமுக ஆகிய நீங்கள் ஆட்சிக்கு வர மாட்டீர்கள்... தனியார் பள்ளி ஆசிரியர்களே ( கொத்தடிமைகளாகிய நாம் ) பாவப்பட்ட ஜென்மங்கள்... நாம் அனைவரும் நமது வாக்கு நோட்டோ விற்கு மட்டும் செலுத்தலாம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.....

    ReplyDelete
  2. அரசு ஆசிரியர்கள் ஓட்டு இருக்கே....

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லை ராஜா

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி