தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் வேலை அரசுக்கு அண்ணாமலை 48 மணி நேரம் அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2023

தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் வேலை அரசுக்கு அண்ணாமலை 48 மணி நேரம் அவகாசம்

''ஆசிரியர் தகுதி தேர்வு முடித்து போராடும் பட்டதாரிகளின் கோரிக்கையை, 48 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், பட்டதாரிகளுடன் பா.ஜ.வும் இணையும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கடந்த 2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள், தங்களுக்கு போட்டி தேர்வு இன்றி அரசு வேலை கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று, நான்காம் நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.


இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பட்டதாரிகளை சந்தித்து பேசினார்.


அதன்பின், அவர் அளித்த பேட்டி:


தகுதி தேர்வு முடித்த பட்டதாரிகளின் போராட்டம் புதிதல்ல. ஒவ்வொரு முறை போராடும்போதும், அரசு அவர்களிடம் பேச்சு நடத்தி முடித்துக் கொள்கிறது. இந்த போராட்டம் நியாயமானது.


இவர்களில், 24 ஆயிரம் பேர் ஏற்கனவே வேலைவாய்ப்பு பெற்று விட்டனர். அதன்பிறகு, 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்பட்ட பின், 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


'கடந்த 2013ம் ஆண்டில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த அனைவருக்கும், போட்டி தேர்வு இன்றி, அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையின், 177வது அம்சமாக கூறப்பட்டுள்ளது.


ஆனால், ஆட்சிக்கு வந்த பின், இந்த வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்றவில்லை.


எனவே, அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். தமிழக அரசுக்கு, இன்று முதல், 48 மணி நேரம் அவகாசம் அளிக்கிறோம். உரிய பேச்சு நடத்தி, சுமூக முடிவெடுத்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.


இல்லாவிட்டால், வரும், 15ம் தேதி பா.ஜ.,வும் போராட்டத்தில் இணையும். நானும் களத்துக்கு வருவேன். போராட்டம் பிரமாண்டமாக நடக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.


வி.சி., தலைவர் திருமாவளவனும் போராட்ட களத்துக்கு வந்து, பட்டதாரிகளின் கோரிக்கையை கேட்டுக் கொண்டார்.


முன்னதாக, போராட்டம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி தலைமையிலான பிரதிநிதிகள், நேற்று முதல்வரின் முதன்மை செயலர் உதய சந்திரன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா ஆகியோரை சந்தித்து, மனு அளித்தனர்.


அவர்கள் கோரிக்கை குறித்து, உரிய ஆய்வு செய்வதாக தெரிவித்துஉள்ளனர்.

11 comments:

 1. ஆய்வு பண்ண போறிங்களா?!🤔 பண்ணுங்க பண்ணுங்க.... பார்லிமென்ட் எலெக்ஷன் தி மு க வீழ்த்தப்படும்.... அதிகாரிகள் மெத்தனப் போக்கால் 😄😄

  ReplyDelete
 2. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது கடந்த அதிமுக ஆட்சியில். கேட்டால் நிதி இல்லை. ஆனால் கீழ்மட்ட அரசியல்வாதி முதல் மேல்மட்ட அமைச்சர் வரை எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்று அனைவருக்கும் தெரியும். அதே நிலை இப்போதும் தொடர்ந்து வருகிறது. கேட்டால் நிதி இல்லை. அனைத்து பணியிடங்கள் நிரப்பவில்லை. மாறாக அனைத்து பணியிடங்கள் தற்காலிக ஊழியர்களாகவே இப்போதும் நியமனம் செய்து கொண்டு இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது போன்று நடந்து வருகிறது. படித்து விட்டு வேலையை எதிர்நோக்கி உள்ளவர் அதிருப்தி அடைந்த நிலையில் உள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. அதிமுக கதை ஏன்..? திமுக விடியல் அரசு இரண்டாம் ஆண்டில் உள்ளது. தற்சமயம் முதல் முதல் பலர் ஜப்பான் பயணம் மேற்கொண்டு உள்ளனர். நிறைவு பெற்றதும். புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும். கடந்த ஆண்டு துபாய் சென்று வந்த உடன் பல நல்ல பயனுள்ள திட்டங்கள் நிறைவேறியது.

   Delete
 3. கடந்த ஆட்சியில் இருந்த நிலையை மாற்றி விடியல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

  ReplyDelete
 4. அண்ணாமலை போராட்ட களத்தில் குதித்தது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. கண்டிப்பாக ஆளும் தி மு க அண்ணாமலை மீதும் ஆளுநர் ரவி மீதும் கொண்டுள்ள பயத்தால் போட்டித் தேர்வை ரத்து செய்து ஒரு அரசாணையை வெளியிட்டு பி ஜே பி ஆட்சிதான் தமிழ் நாட்டிலும் நடக்கிறது என்பத பெருமையோடு மறைகமாக பறைசாற்றியே தீரும்.

  ReplyDelete
  Replies
  1. இந்திர போகா உங்களுடைய கருத்து நியமனத்தேர்வு நடக்க வேண்டும் என்பதையே சுட்டுகிறது...
   எங்கள் தளபதியார் உறுதியாக அரசாணையை இரத்து செய்வார்... உங்கள் அதிகாரத்திற்குப் பயந்து அல்ல...

   Delete
  2. அண்ணாமலை ஆளுநர் ரவி போன்ற கோமாளிகளை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் தமிழக முதல்வருக்கு இல்லை..

   Delete
  3. but ought to give a reply for the demand - as it is a promise given by him.

   Delete
 5. தகுதித் தேர்விற்கும் நியமனத் தேர்விற்கும் புரிதல் இல்லை

  ReplyDelete
 6. We are waiting from 2013
  still didn't get a job
  Government isn't responding.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி