பதவி உயர்வின்றி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2023

பதவி உயர்வின்றி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குவதாக இருந்தது; நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில், திருத்திய கால அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, 15ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த கவுன்சிலிங்கில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை என்றும் பதவி உயர்வு வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய பதவி நிலையிலேயே கவுன்சிலிங்கை நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.


அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே பாணியில், உபரியாக உள்ள பணியாளர்களையும் இடமாறுதல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிறைவு கலந்தாய்வை கைவிடவேண்டும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி