பள்ளி நிர்வாக பணிகளுக்கு டிஜிட்டல் முறையில் மாற சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2023

பள்ளி நிர்வாக பணிகளுக்கு டிஜிட்டல் முறையில் மாற சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு.

📚சென்னை: பள்ளி நிர்வாக பணிகளுக்கு, பழைய காகித கோப்பு முறையில் இருந்து, 'டிஜிட்டல்' முறைக்கு மாறும்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


📚கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், புதிய கல்வியாண்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களான, சி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


📚பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கினர்.


📚பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், அதிகாரிகளின் பணிகள்; அரசின் எதிர்பார்ப்புகள்; அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். இந்த நிகழ்வில், சி.இ.ஓ.,க்கள் தங்கள் 'லேப்டாப்'புடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


📚அப்போது, பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வதோடு, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'எமிஸ்' இணையதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். 


📚இன்னும் பழைய காகித கோப்பு முறையிலேயே இருக்காமல், நவீன முறையில், லேப்டாப் மற்றும் கணினியை பயன்படுத்தி, டிஜிட்டல் நிர்வாகத்துக்கு மாற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

1 comment:

  1. பள்ளிகளில் அதற்கான ஆட்களை நியமித்து விடக்கூடாது. ஆனால் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் உடனடியாக செய்ய வேண்டும். கணினி வேலை செய்யும் ஆசிரியர்கள் நொந்து சாக் வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி