அரசு பள்ளி துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2023

அரசு பள்ளி துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைப்பு?

உள்ளாட்சி துறை ஒத்துழைப்பு இல்லாததால், அரசு பள்ளிகளின் துப்புரவு பணிகளை, தனியாரிடம் ஒப்படைக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில், 38 ஆயிரம் அரசு பள்ளிகளில், துப்புரவு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள், மாவட்ட அளவில் உள்ளாட்சி துறையால் செய்யப்படுகின்றன.


அதாவது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நிதி வழங்கப்பட்டு, இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


ஆனால், பெரும்பாலான நாட்களில், அரசு பள்ளிகளின் வளாகங்கள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை.


அதனால், பல நேரங்களில் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், வளாகங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில், மாணவ --- மாணவியரும் அப்பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.


இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், துப்புரவு மற்றும் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


அதற்கான செலவுகளை, பள்ளிக் கல்வித் துறை ஏற்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 comments:

  1. All post filled by Temporary only. But they expect the DMK and ADMK government should be PERMANENT. Educated persons life??????????????????????

    ReplyDelete
  2. நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இடம் அனைத்து பள்ளிகளிலும் தோற்றுவிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  3. பார்லிமென்ட் எலெக்ஷன்ல ரிப்ளை கொடுங்க எல்லாம் தானா நடக்கும் 😄😄😄

    ReplyDelete
  4. Too dirty in government schools and govt offices. It should be clean by the proper workers .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி