பணிநிரவல் மூலம் ஐந்தாண்டு சலுகையை இழக்கும் ஆசிரியர்கள் - கலந்தாய்வு விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர கோரிக்கை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2023

பணிநிரவல் மூலம் ஐந்தாண்டு சலுகையை இழக்கும் ஆசிரியர்கள் - கலந்தாய்வு விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர கோரிக்கை!!



நான் ஒரு பட்டதாரி ஆசிரியை.
26/09/2014 அன்று பணியில் அமர்த்தப்பட்டு 22/06/2018 ல் பணிநிரவல் மூலம் பணியாற்றிய அதே மாவட்டத்தில் பணி மாற்றல் பெற்றேன். 

தற்போது பணி மாறுதல் கலந்தாய்வில் ஒரே பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி பணியாற்றினால் முன்னுரிமை என வகுக்கப்பட்டுள்ளது. என் போல் ஆசிரியர்களுக்கு அது சாத்தியமில்லை. 

பணி நிரவல் என்பது நாங்கள் விரும்பி பெற்றது இல்லை. (வெளி மாவட்டத்தில் இருந்து வந்த எங்களுக்கு அந்தப் பள்ளியில் நிரவல் வரும் என்று தெரியாது). பணி நிரவல் இல்லையென்றால் நாங்களும் அதே பள்ளியில் இருந்திருப்போம். அப்படி என்றால் எட்டு வருடங்கள் முழுமையாக நிறைந்திருக்கும் நாங்களும் இந்த முன்னுரிமையை பெற்றிருக்கலாம்.

 தற்போது 4 வருடங்களும்  10 மாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் இந்த  முன்னுரிமையை  நாங்கள் பெற முடியவில்லை. சென்றாண்டு கலந்தாய்விலும்  பணி நிரவல் காரணமாக சீனியாரிட்டி ரேங்க் பின்னோக்கி சென்றது. தற்போதும் அதே நிலையில் உள்ளோம். இது எவ்விதத்தில் நியாயம். அதிகாரிகள் உரிய மாற்றங்கள் கொண்டு வந்து யாரையும் பாதிக்காதவாறு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

6 comments:

  1. நான் வெளி மாவட்டத்தில் பணி நியமனம் பெற்ற நாள் 22.09.2017.பணி நிரவல் மூலம் வேறு பள்ளியில் சேர்ந்த நாள் 18.06.2018. ஒரு மாத கால வித்தியாசத்தில் தற்போது 5 வருடம் ஒரே பள்ளியில் பணி புரிந்து இருந்தால் கிடைக்கக்கூடிய முன்னுரிமையை இழக்க வேண்டி உள்ளது

    ReplyDelete
  2. இரண்டு கையும் இரண்டு காலும் இல்லாத முடவனைவிட நடக்கக் கால் இருக்கேன்னு நினைச்சு சந்தோசப்பட்டு வாங்குற சம்பளத்திற்கு வேலைசெய்யுங்க..மேலே அன்னாந்து பார்த்துட்டு பொறாமைப் படாமல் தலைகுனிந்து கீழே கிடப்னை நினைத்து மகிழ்ச்சியாய் வாழுங்கள்

    ReplyDelete
  3. வேலைவாய்ப்பு இல்லாமல் லட்சக் கணக்கானோர் இருக்க. உங்கள் கவலையை பெரிய இழப்பாக கூறுவது நகைப்பாக உள்ளது. VRS வாங்கி விருப்ப்பட்ட இடங்களுக்கு செல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எப்பா சாமிகளா... வேலைவாய்ப்பு தரும்போது உங்களுக்கு பின்னாடி உள்ள ஆட்களுக்கு வேலை கொடுத்தா சீனியாரிட்டில முன்னாடி உள்ள நீங்க கொதிப்பீங்கல்ல... அது மாதிரி தான்பா இதுவும்.... வேலைக்கு வந்த பிறகு உள்ள சீனியாரிட்டி பிரச்சனை... விவரம் தெரியாம சும்மா கமெண்ட் பண்ண கூடாது.....@ஆசிரியன், @Tamilan red 1414, @unknown....

      Delete
  4. எப்பா சாமிகளா... வேலைவாய்ப்பு தரும்போது உங்களுக்கு பின்னாடி உள்ள ஆட்களுக்கு வேலை கொடுத்தா சீனியாரிட்டில முன்னாடி உள்ள நீங்க கொதிப்பீங்கல்ல... அது மாதிரி தான்பா இதுவும்.... வேலைக்கு வந்த பிறகு உள்ள சீனியாரிட்டி பிரச்சனை... விவரம் தெரியாம சும்மா கமெண்ட் பண்ண கூடாது.....@ஆசிரியன், @Tamilan red 1414, @unknown....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி