பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

பள்ளிக் கல்வித் துறையில்  22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை 08.06.2023க்கு ஒத்திவைத்தது.


பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 8 பேர் மனு செய்தனர். அவர்கள் 8 பேருக்கும் Individual ஆக Stay வழங்கப்பட்டது. மற்றபடி மொத்தமாக B.T. Deployment Counselling - க்கு தடைவிதிக்க மறுத்து விட்டது.

ஒருவர் PG to BT Deployment செய்ய CEO வழங்கிய Deployment List - ஐ Challenge பண்ணி Stay பெற்றுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் BT Deployment Counselling - க்கு தடை கேட்ட 4 பேரின் மனுவும் Dismiss செய்யப்பட்டது.

எனவே Transfer Counselling தொடர்பாக வேறு எந்தத் தடையும் இப்போது வரை இல்லை. வழக்கம் போல் நடைபெறும்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி