திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2023

திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்:

 

12 ஆண்டாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.


அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகியவற்றை கற்று தரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

வருகின்ற ஜூன் மாதம் பள்ளி ஆரம்பித்ததும், பகுதிநேர ஆசிரியர்கள் இந்த வேலைக்கு சேர்ந்து 13வது கல்வி ஆண்டு தொடங்குகிறது.

திமுக ஆட்சிக்கு வந்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஆனாலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181-படி பணிநிரந்தரம் நிறைவேற்றவில்லை.

கடந்த இரண்டு ஆண்டில் சம்பள உயர்வு வழங்கவில்லை. மே மாதம் சம்பளமும் வழங்கவில்லை.

ரூபாய் 10ஆயிரம் குறைந்த சம்பளத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தவிக்கின்றார்கள்.

தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை சம்பளம் வழங்கி பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசின் பண பலன்கள் கிடைக்கும்.

முதல்வரிடம் பலமுறை மனு கொடுத்து கோரிக்கை நேரில் வலியுறுத்தப்பட்டது.

லட்சக்கணக்கில் மனுக்கள் அனுப்பியும் கோரிக்கை மீது கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது.

கவன ஈர்ப்பு செய்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகள் அறிக்கை மூலமாகவும், சட்டசபையிலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளார்கள்.

ஆனால் பணிநிரந்தரம் குறித்து அரசின் முடிவு தெரியவில்லை.

இதனால் போராடும் நிலைக்கு பகுதிநேர ஆசிரியர்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள்.

இதனை மனிதாபிமானத்துடன் நினைத்து, தமிழக முதல்வர் அவர்கள் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் முன்னேற, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
********************

எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203

7 comments:

  1. இதை solliththanaya ஓட்ட கேட்டயங்க.....

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்ல ராஜா.... புஹா... ஹா... ஹா.... அவர் சொல்லாததை செய்ற முதல்வர் அவர் 😄

      Delete
  2. முடிஞ்சது பார்லிமென்ட் எலெக்ஷன்ல பழி வாங்கி பாருங்க 😆😆

    ReplyDelete
  3. யோவ் செந்தில் குமார் எவடா நீ வாயமூடு.

    ReplyDelete
  4. 😡😡😡😡😡😡😡 இது உலகமே இல்ல எங்கள் உழைப்பு தொலைத்தது நாங்கள்.முதல்வர் மைராடி என்னையா பண்ற.

    ReplyDelete
  5. Association nu சொல்லி பணம் பரிக்கதிங்க, அவங்க செஞ்சா செய்யட்டும் இல்லை என்றால் போகட்டும். ஒரு போராட்டமும் வேண்டாம். ஒரு அணியும் பிடுங்க வேண்டாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி