பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2023

பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளனர்.


தமிழக அரசு பள்ளிகளில், 12 ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.


ஓவியம், தையல், இசை, கணினி, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் நடத்தும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் கோடை விடுமுறை என்பதால், அந்த மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.


இந்நிலையில், தங்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பணி வழங்குமாறும், பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குமாறும் கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளனர்.

2 comments:

  1. இது உலகமே இல்லை ஏன் உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறீர்கள் இருக்கிற வேலையை போய் பாருங்கள்."இறந்தால்" அங்க மட்டும் நிம்மதி கிடைத்து விடுமா._🙄🙄🙄🙄🙄🙄🤦🤦🤦🤦🤔🤔🤔🤔🤔😡😡😡😡😠😠😠😠

    ReplyDelete
  2. தி.மு.க வும் அதிமுக வைப் போல முழுத் திருடன். பைபிளில் ஒரு வாசகம் உண்டு. திருடன் திருடவும் கொலை செய்யவும் வருகிறானேயன்றி வேறொன்றிர்க்கும் வரான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி