பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 5, 2023

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

 

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இது தொடா்பாக தொழில்நுட்பக்கல்வி இயக்குநா் இரா.லலிதா, அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 தொழில்நுட்பக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்புக் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்களுக்கு மே 5 முதல் ஜுன் 11 முடிய 39 நாள்கள் கோடைகால பருவ விடுமுறை விடப்படுகிறது.


கோடைவிடுமுறைக்குப் பின் ஜுன் 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் கல்லூரிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும். தோ்வுப் பணி மற்றும் மைய மதிப்பீட்டு பணிக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு தோ்வுப் பணிகள் முடிந்த நாளுக்குப் பிறகே பருவ விடுமுறையை அனுபவிக்க கல்லூரி முதல்வா்கள் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி