TET தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு: அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2023

TET தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு: அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

 

ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் மறு நியமன போட்டித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


`டெட்' தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு: அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வுநடத்த வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றுமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரிஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2013-ம்ஆண்டு நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வெயிட்டேஜ் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெயிட்டேஜ் முறையிலான பணி நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அம்முறை கைவிடப்பட்டது.


அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியர் நியமனத்துக்கு புதிய முறை கொண்டுவரப்படும் என்றும் அதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வுநடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

 இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் பணிநியமனத்துக்காக மீண்டும் ஒருபோட்டித் தேர்வு நடத்தக் கூடாதுஎன்று தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றக்கோரியும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சங்கத்தின் மாநிலதலைவர் கபிலன் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.


தேர்தல் வாக்குறுதி: உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``இந்த அரசாணை கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த அரசாணைக்கு எதிராக குரல் கொடுத்தார். திமுக தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்களில் பாதிபேர் ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு எஞ்சியவர்களுக்கு மற்றொரு போட்டித் தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்? 2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த அரசாணையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.

18 comments:

  1. 2013 க்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டுமாம் என்னடா உங்கள் நியாயம் 2017 க்கும் பழைய வெயிட்டேஜ் முறையிலேயே சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டது ஆகவே அவர்களுக்கும் G.O 149 பொருந்தாது 2013,2017 க்கும் விலக்கு கேட்டால் அது ஒரு வகையில் நியாயமானதாக இருக்கும்.இதுலயே உங்கள் (2013)சுயநலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது ஏதோ இவனுங்க மட்டும் தான் ஆசிரியர் தகுதி தேர்வு பாஸ் பண்ண மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க. உங்களால்(2013) தான்டா நியமன தேர்வுக்கே G.O போட்டாங்க நாசமா போனவங்களா உங்களால் தான் நானும் (2017)பணிவாய் இல்லாமல் போய் உள்ளேன் (2017-100,2023-97 மதிப்பெண் பெற்றுள்ளேன் பேப்பர் 2 வில்)

    ReplyDelete
    Replies
    1. அய்யோ பாவம் யார் பெத்த புள்ளயோ

      Delete
    2. உன்னை ஒரு தாய் பெற்றிருப்பாள் அல்லவா அதே போலத்தான் என்னையும் ஒரு தாய் பெற்றுள்ளாள்...

      Delete
  2. நியமனத் தேர்வு வருவதற்கு காரணமே இந்த பேராசை பிடித்த சுயநலவாதிகள் தான்.... நாசமா போனவர்களே....

    ReplyDelete
  3. G.O 149 ஐ நீக்கம் செய்து பிஎட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.GO 149 ஆனது 2018 ல் தான் வந்தது என்று 2013 க்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க போராட்டம் செய்யாமல் 2017க்கும் முன்னுரிமை அளிக்க போராடலாம்.ஆகையால் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு தகுதித் தேர்வு தான் அந்த மதிப்பெண் கொண்டு பணி வழங்காமல் GO 149 நீக்கம் செய்து பிஎட் பதிவு எம்பிளாய்மென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.அதை விட்டு 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தால் , அதற்கு தேர்வு வைப்பதே‌ சிறந்த முறை.

    ReplyDelete
  4. TET pass+B.Ed seniority method is best

    ReplyDelete
    Replies
    1. Yes...true....Then only a lot of seniors can get jobs before their retirement or death

      Delete
  5. what about the candidate who passed in 2022? what the decision making authority thinks and how the decision are taken to solve..

    ReplyDelete
  6. தேர்தலில் நிற்க்க வேண்டும் என்றால் முதலில் இதுல தேர்வு வைங்கடா...

    ReplyDelete
  7. Replies
    1. நீங்கள் எல்லாம் ஒரு ஆசிரியரா?

      Delete
  8. 2017 நாங்க நாய்களா? உங்கள் கோரிக்கையிலே (2013 க்கு மட்டும் வேலை கொடுங்கள் என்பதில்)நீங்கள் தோற்று விட்டீர்கள். எழுதி வைத்துக்கொள் ஜெயக்குமார் என்கிற நாயே உங்கள் கோரிக்கை ஒரு போதும் நிறைவேறாது நியமனத் தேர்வு என்பது உறுதி

    ReplyDelete
  9. Another exam is best way for all cantidats

    ReplyDelete
  10. சீனியாரிட்டி படி வேலை போட்டா 2017, 2019, 2022 ல பாஸ் பண்ணவங்க லாம் எப்போ வேலைக்குப் போறது. நியமனத்தேர்வே சரியானது

    ReplyDelete
  11. போட்டித் தேர்வை எதிர்த்து அதனால் பாதிப்பு ஏற்பட உள்ளவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், சரி என்று இதற்கொரு மாற்று முறையை அரசு கொண்டு வரும், அந்த மாற்று முறையால் பாதிப்பு ஏற்பட உள்ளவர்கள் போராட்டம் நடத்துவார்கள், அதற்கு ஒரு மாற்று மாற்று முறையை அரசு கொண்டு வரும், அந்த மாற்று மாற்று முறையால் பாதிப்பு ஏற்பட உள்ளவர்கள் போராட்டம் நடத்துவார்கள் , அதற்கு ஒரு மாற்று மாற்று மாற்று முறையை அரசு கொன்டு வரும் , அந்த மாற்று மாற்று மாற்று முறையால் பாதிப்பு ஏற்பட உள்ளவர்கள் போராட்டம் நடத்துவார்கள், உடனே அரசு அதற்கு ஒரு மாற்று மாற்று மாற்று மாற்று முறையை அரசு கொண்டு வரும். அந்த மாற்று மாற்று மாற்று மாற்று ....வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு.... வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு....வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு....

    ReplyDelete
  12. 2013ல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கொடுப்பதென்றால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு tet தேர்வை நடத்தத் தேவையில்லை.Pg trbல் ஒரு மதிப்பெண்ணில் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு அடுத்த தேர்வுகளில் முன்னுரிமை அளிப்பதில்லை.அது போல்தான் tet தேர்வும்.tetல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி