TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2023

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் கூடாது; ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும்.


தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாத தமிழக அரசு தான் இதற்கு காரணம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்; போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; அதை தமிழக அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு மட்டும் தான் நடத்தப்படுகிறது; கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு மட்டும் தான் நடத்தப்படுகிறது. ஆனால், அந்த பணிகளை விட குறைந்த கல்வித் தகுதியும், ஊதியமும் கொண்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித் தேர்வு, பின்னர் போட்டித்தேர்வு என்பதை ஏற்க முடியாது. இது பெரும் அநீதி.


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதி ஆகும். 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதே நிலையே இப்போதும் தொடர வேண்டும் என்பது தகுதித் தேர்வில் வென்றவர்களின் கோரிக்கை. அதை ஏற்று அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

22 comments:

  1. 2012க்கு பின்பு பி.எட் முடித்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் என்ன பண்ணுவது..

    PG Trb ல பாஸ் பண்ணிய பின் உள்ளவர்களுக்கு இது போல் பணியமர்த்த முடியுமா.....மற்ற (2017,2019,2022-23)தகுதி வாய்ந்த ஆசிரிய நண்பர்களுக்கு தீர்வு சொல்லிவிட்டு support பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. 2013,2017,2019,2023 என்று அனைவரையும் PGTRB ல் பின்பற்றப்படுவது போல மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வதே சரியான வழி. பணிவாய்ப்பை இழப்பவர்கள் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வில் தனது மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கலாம்..

      Delete
  2. நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  3. நீங்கள் பல முறை அறிக்கை விட்டுள்ளீர்கள்.... நன்றி ஐயா....

    ReplyDelete
  4. 2012 பிறகு, 2013 tha varthu... direct ha 2017 varala nanba... ungaluku iruka feel... tha engalukum...

    ReplyDelete
  5. Pg trbல் இதேபோல் கேட்க வேண்டியதுதானே.tet தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். 2013,2014,2015,2016,2017,2018,2019,2021,2022க்கு பிறகுதான் 2023 வருகிறது.

    ReplyDelete
  6. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து 3 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தீர்வு என்ன?TET PASS + B.Ed EMPLOYMENT SENIORITY இந்த முறையில் பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. G.O 149 ஐ நீக்கம் செய்து பிஎட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.GO 149 ஆனது 2018 ல் தான் வந்தது என்று 2013 க்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க போராட்டம் செய்யாமல் 2017க்கும் முன்னுரிமை அளிக்க போராடலாம்.ஆகையால் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு தகுதித் தேர்வு தான் அந்த மதிப்பெண் கொண்டு பணி வழங்காமல் GO 149 நீக்கம் செய்து பிஎட் பதிவு எம்பிளாய்மென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. Pgtrb-la ithu pola rendu exam vaikala nanba

    ReplyDelete
  8. இருக்கின்ற காலிப்பணியிடங்கள் அனைத்தையும் அனைத்து ஆண்டுகளிலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டே நியமிக்க வேண்டும்....2013 க்கு மட்டுமே அனைத்து பணியிடங்களையும் விட்டு விட கூடாது....

    ReplyDelete
  9. 2017, 2019 ,2023 ல பாஸ் ஆனவங்க எப்போயா வேலைக்குப் போறது

    ReplyDelete
  10. அனைவருக்கும் வேலை வேண்டும்.

    ReplyDelete
  11. those jokers will go home in one or two days

    ReplyDelete
  12. ஆசிரியர் தகுதி தேர்வும் வேண்டாம் நியமன தேர்வும் வேண்டாம், நேரடியாக 12, UG மற்றும் B.ED மதிப்பெண்கள் வைத்து தேர்வு செய்யுங்கள். இது தான் சரியான தீர்வு.

    ReplyDelete
  13. 2013 இல் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்று வேலை வாய்ப்பை இழந்தவர்கள்
    எப்படி அடுத்த நியமனத்திற்கு முன்னுரிமை பெற முடியும், இது சட்டத்திற்கு
    புறம்பானது, அப்படி என்றால் PGTRB யில் 75 க்கு மேல் எடுத்தவர்கள் தான்
    அடுத்த தேர்வுக்கு முன்னுரிமை பெறுவார் என்று இல்லையே. இவர்களின்
    போராட்டம் நியமன தேர்வுக்கு தயாராகாமல் படிக்காமல் இலவசமாக வேலை பெற
    வேண்டும் என்ற ஒரு எண்ணம் தவிர வேறு ஒன்றும் இல்லை.
    2013 மற்றும் 2014 ஆகிய இரு ஆண்டுகளில் 32000 க்கும் மேற்பட்ட தொடக்க
    மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப பட்டன. அப்பொழுது
    சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்று வேலை கிடைக்காமல் தோற்றவர்களுக்கு
    மட்டுமே இப்பொழுது வேலை கொடுக்க வேண்டும் என்பது என்ன ஒரு முட்டாள் தனம்.
    அதன் பிறகு படித்து ஆசிரியர் தேர்வுக்காக காத்திருப்போர் வாழ்வாதாரம்
    என்ன ஆவது. 2017 க்கு பிறகு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு
    போராட்டம் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  14. சுயநலமான பதிவு

    ReplyDelete
  15. 2013 ,17,....ல் தேர்ச்சி பெற்று தற்போது தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் நிச்சயம் பணிஆணை உண்டு.

    ReplyDelete
  16. Ungalukulaye nalla adichukonga... Kadaisila oruthanukkum job kidaika porathu illa...

    ReplyDelete
  17. 2013 mattum first velai podanum

    ReplyDelete
    Replies
    1. Neenga 2050 varaikkum porattam pannitu than irupinga.... Note panni vechukonga....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி