TNPSC தேர்வில் ‘வசூல் ராஜா’ பட பாணியில் முறைகேடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2023

TNPSC தேர்வில் ‘வசூல் ராஜா’ பட பாணியில் முறைகேடு!

 

புதுக்கோட்டை நகர காவல் சரகம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Combined Engineering Subordinate Services Examination) தேர்வு தொடங்கி நடைபெற்றது.இதில் ஆயிரத்து 299 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 666 பேர்கள் மட்டும் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த தர்மன் (20) கலந்துகொண்டு தேர்வெழுதினார். இவர் காதில் ட்ரான்ஸ்மீட்டர் (ப்ளூடூத்) கருவியும், சட்டையில் கேமராவும் பொறுத்திக்கொண்டு தேர்வெழுதியுள்ளார்.இதனைக் கண்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்வாளர் வைத்திருந்த ட்ரான்ஸ்மீட்டர் கருவி மற்றும் கேமராவை பறிமுதல் செய்து அவரை வெளியில் அனுப்பி வைத்தனர். நடிகர் கமல்ஹாசன் நடித்த 'வசூல் ராஜா MBBS' திரைப்படத்தில் கமல் தனது காதில் ப்ளூடூத் கருவியை மாட்டிக்கொண்டு தேர்வெழுதுவார்.


அதே பாணியில் இந்த மாணவரும் காதில் ட்ரான்ஸ்மீட்டர், பட்டன் கேமரா வைத்துக்கொண்டு வெளியில் இருக்கும் தனது நண்பனுக்கு வினாக்களை அனுப்பி விடைகளை பெற்று தேர்வெழுதியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.தொடர்ந்து, முறைகேடாக தேர்வெழுதிய தர்மனை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, தர்மனுக்கு இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் காப்பியடிக்க உதவிய ஈரோட்டைச் சேர்ந்த பரணிதரணை (20) என்பவரை புதுக்கோட்டை நகர காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேர்வு எழுத வந்த சக தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 comments:

  1. வாழ்த்துக்கள் 💐💐💐

    ReplyDelete
  2. yes ......vazhga valamudan raja......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி