Jun 27, 2023
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு வகுப்புகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த வகுப்புகளில் மாணவர்களின் பாட சம்மந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
சனி ஞாயிறு சிறப்பு வகுப்பு வைங்க.. எவனும் இனி அரசு பள்ளிக்கு படிக்க வர கூடாது
ReplyDelete