அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு, இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர்களுக்கு, ஒரு மாதம் தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மார்ச், ஏப்ரல் மாத சம்பளமும், பல மாவட்டங்களில் வழங்கப்படவில்லை.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாத சம்பளம் 60,000,1,00,000 சம்பளம் வாங்குபவர்களுக்கு நேரத்துடன் சம்பளம் வழங்குகிறார்கள்.ஆனால் 12,000,15,000 வாங்குபவர்கள்தான் இவர்களுக்கு இளிச்சவாய்கள்.எல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம்.
ReplyDelete