"வீட்டுக்கொரு விஞ்ஞானி 2023" நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2023

"வீட்டுக்கொரு விஞ்ஞானி 2023" நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

புதிய தலைமுறை என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் , " வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023 " நிகழ்ச்சியினை வழங்கி வருவதாகவும் , மனிதகுலத்தின் நலனுக்காக புதுமையும் எளிமையும் இணைந்த புதுப்புது கருவிகளைக் கண்டுபிடிக்கும் புதிய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் கௌரவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அறிமுகப்படுத்தி மேலும் , தமிழகத்தில் உள்ள மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிற நாளைய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் உலகிற்கு அறிவிக்கின்ற உன்னத மேடை " வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023 " நிகழ்ச்சி , இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் நடத்த இருப்பதாகவும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு , அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களும் பங்கேற்க உரிய அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.


 எனவே , மேற்படி நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு , அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் பங்கு பெற தேவையான ஒத்துழைப்பினை தலைமை ஆசிரியர் வாயிலாக அளித்து உதவிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி