வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 66.70 லட்சம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2023

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 66.70 லட்சம்

தமிழகத்தில் மே மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 66.70 லட்சமாக உள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்:தமிழகத்தில் மே 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 ஆக உள்ளது. அவா்களில் ஆண்கள் 30 லட்சத்து 98 ஆயிரத்து 879 பேரும், பெண்கள் 35 லட்சத்து 71 ஆயிரத்து 680 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 266 பேரும் உள்ளனா்.


வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் மொத்த எண்ணிக்கையில், வயது வாரியான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேரும், 19 முதல் 30 வயதுக்குள்பட்ட கல்லூரி மாணவா்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேரும், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரா்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேரும் உள்ளனா். 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 6 ஆயிரத்து 391 போ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. சுமார் 20 வருடங்களாகப் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் பணி கிடைக்காததின் விளைவு. எதற்காக இந்த வேலைவாய்ப்பு அலுவலகம்? அதில் பணிபுரிவதற்கு ஏன் இநத்தனை அலுவலர்கள்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி