நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாக கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும் தமிழக வரலாற்றில் 10 மாதங்களில் 2வது முறையாக மின்கட்டணம் உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை, மீண்டும் மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படக்கூடிய தாக்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து ஜூலை முதல் கட்டண உயர்வு முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து மின்கட்டணத்தை 6 சதவீதம் அல்லது மின்வாரியத்தின் பணவீக்கம் 4.7 சதவீதத்திற்கு உயர்திக்கொள்ளலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
Press Release
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி