இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்ததி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.
1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது.
ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.
எனவே பள்ளிகள் திறப் பது மீண்டும் தள்ளி போகுமா? இல்லையா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.
வகுப்புகுள்ள நிழல் ல தான பாடம் நடத்துரீங்க. யாராவது வயல் காட்டில் பாடம் நடத்துரீங்களா.
ReplyDeleteபோன வருஷம் கொரோனானு சொல்லி டைம் ஓட்டியாச்சு.
மதிப்பெண்கள் சதவீதம் கூட்ட கூடுதலாக போட்டதாக செய்திகள்.
வெயில் காலம் முடிந்தா மழைக்காலம் வரும்.. மழைக்காலம முடிந்த ததும் குளிர் காலம்வரும் எதையும் மாணவர்களால் தாக்கு பிடிக்க இயலாது ஆதலால் பள்ளியை உகந்த சூழ்நிலை வரும் வரை பள்ளியை மூடி வைத்து புழந்தைகளின் படிப்பை சீரழிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.கொரானாவினாலே அனைத்து குழந்தைகளின் அடிப்படை கல்வியே இல்லாத சூழல் ஆதலால் இதை குத்தல கொண்டு மாணவர்களின் கல்வியில் நலன் கருதி உடனே பள்ளியை திறக்க வேண்டும்
ReplyDeleteவிடுமுறை விடப்படும் நாட்கள் சனிக்கிழமைகளில் வைத்து ஈடு செய்து ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்றப்படும்....எனவே விடுமுறை தேவையில்லாதது....
ReplyDelete