ஆசிரியர் நியமன பிரச்னைக்கு முடிவு கட்டுங்க! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2023

ஆசிரியர் நியமன பிரச்னைக்கு முடிவு கட்டுங்க!

 

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ( தினமலர் செய்தி )


தமிழகத்தில், 670 மேல்நிலை, 435 உயர்நிலை, 1,003 நடுநிலை மற்றும் 1,235 துவக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல், புள்ளி விபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.


ஏற்கனவே, அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ள சூழலில், தலைமை ஆசிரியர்களும் கணிசமான அளவில் இல்லை என்பது கவலை தரும் விஷயம்.


தற்போதைய நிலையில் அரசு பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் பணி சம்பந்தப்பட்ட சில வழக்குகள் நீதிமன்றங்களில் தீர்வுக்காக காத்திருக்கின்றன. அதனால், இந்த வழக்குகளை காரணம் காட்டியே, தமிழக அரசு தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு குறைந்த ஊதியத்தை கொடுத்து ஏமாற்றி வருகிறது.


அரசியல் கட்சிகள் தங்களுக்கு பாதிப்பு என்றால், நீதிமன்றங்களில் விடுமுறை நாட்களில் கூட வழக்குகள் தொடுத்து, தங்களுக்கு தேவையான பரிகாரத்தை பெறுகின்றன. அதேநேரத்தில், எதிர்கால சிற்பிகளை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி நியமன வழக்குகளில் மட்டும் அலட்சியம் காட்டுகின்றன.


'டாஸ்மாக்' மதுக் கடைகள் தொடர்பாக, ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டால், அதை எவ்வளவு விரைவாக நடத்தி, தங்களுக்கு சாதகமான தீர்ப்பு பெற முடியுமோ, அதை தமிழக அரசு செய்கிறது. இதற்காக மேற்கொள்ளும் முயற்சியில், 1 சதவீதம் கூட ஆசிரியர்கள் பணி நியமனம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாக முடிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.


தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் வரை வழக்குகளை நடத்த, நல்ல சீனியர் வழக்கறிஞர்கள் அவர்கள் கட்சியிலேயே உள்ளனர். அவர்கள் வாயிலாக, உயர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பல்வேறு வழக்குகளை, விரைவில் விசாரணைக்கு கொண்டு வந்து முடிக்கலாம்; ஆனால், அதைச் செய்ய தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.


ஒரு சிலர் தாக்கல் செய்த வழக்குகளுக்காக, ஒட்டுமொத்த ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பாமல் இருப்பது சரியல்ல. எனவே, இனியாவது இந்த விஷயத்தில் தமிழக அரசு தீவிர அக்கறை காட்ட வேண்டும். வழக்குகளை விரைவாக முடித்து, அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் தான், பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் சாதிக்க முடியும்; அதன் வாயிலாக, மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும். இல்லையெனில், அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சலுகைகள் வழங்கினாலும் பலனிருக்காது.

9 comments:

  1. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் கடந்த அதிமுக ஆட்சியில் வீணாக்கி விட்டார்கள். இவர்களும் விடியல் கொடுப்பார்கள் என்று நம்பி வாக்குகள் அளித்தோம். இன்னும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து இந்த வருடம் ஓட்டப் போகிறார்கள். இதைப்பற்றி தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் கவலைப்பட மாட்டார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் ஏதாவது அரசிடம் கோரிக்கை வைத்தால் கொதித்து விடுவார்கள் நீங்கள் ஏன் தேர்வு எழுதி வரவில்லை என்று.

    ReplyDelete
  2. thank you sir. 100% truth.
    Please fill teacher post. we are waiting past 10 year. Both govt (ADMK and DMK) are cheating us. This is our humble request kindly give a solution and save our life.

    ReplyDelete
  3. 13 yrs ஆசிரியர் இல்லனா மாணவர் சமுதாயம் ஒரு கேள்விகுறி ஆகிவிடாதா

    ReplyDelete
  4. மானங்கெட்ட ஆட்சி..

    ReplyDelete
  5. மாணவர்களின் எதிர்காலமும் வீண்தான்.

    ReplyDelete
  6. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG - TRB
    தமிழ் & கல்வியியல்
    (TAMIL & EDUCATION)
    குமாரசாமி பேட்டை, தருமபுரி
    Ph: 9344035171,9842138560

    ReplyDelete
  7. வேலை வரும் என்று நம்பி வயதானது தான் மிச்சம்

    ReplyDelete
  8. Epadi PanAm vangitu evana epadi podaradhunu theriyaama mulichitu irukkanga.... ,,,😆😆😆 30,000 Kodi appu....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி