இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 4) நிறைவடைகிறது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் உள்ள 1.5 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம், ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 5-ம் தேதி தொடங்கியது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.49 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றி உள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
எனவே, மாணவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in இணையதளங்கள் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை வரும் 9-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி