தமிழகத்தில் 3,312 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2023

தமிழகத்தில் 3,312 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 

தமிழகத்தில் நடந்து முடிந்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வின் முடிவில் ஏற்பட்டுள்ள 3312 ஆசிரியர்கள் காலியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தற்காலிக ஆசிரியர்கள்:


தமிழகத்தில் 2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 7ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வழக்கமாக கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு புதிதாக உருவாகியுள்ள காலி பணியிடங்களுக்கான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுவார்கள். நடப்பு ஆண்டில் மே மாதம் 8ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்க இருந்த போது கலந்தாய்வானது திட்டமிட்டபடி நடந்து முடிக்காமல் பல்வேறு காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டது.


தற்போது ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு தொடக்க கல்வித்துறையின் கீழ் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், 1111 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1777 இடைநிலை ஆசிரியர்களும் என்று மொத்தமாக 3312 பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் மொத்தம் 3312 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் ஆசிரியர்களை தற்காலிக முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்து கொள்ள பள்ளி கல்வித்துறையானது அறிவுறுத்தியுள்ளது.

12 comments:

  1. கடைசி வரை நீங்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி தரப்போறதே இல்லை... உங்களுக்கெல்லாம் ஓட்டு போட்ட மக்களை சொல்லனும்

    ReplyDelete
  2. ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் இடதுசாரி அரசியல் தலைவர்களிடம் விபரம் அறிந்து செயல்படலாம்.

    ReplyDelete
  3. Tet 2013 passed candidates posting eppo

    ReplyDelete
  4. பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படவில்லை?

    ReplyDelete
  5. It is impossible against NCET rule .TET must for promotion.TN governor and president can't approve any amendment against NCET

    ReplyDelete
  6. Congratulations to Teachers who are appointed before July 2011 got great judgement from high court.last 12 years fight for right.Now they will get increment, regularisation etc

    ReplyDelete
  7. TET passed candidates will get job before December 2023 by new rule TET seniority+ Employment seniority.Due to upcoming 2024 elections ,govt plans to implement before 2023 December

    ReplyDelete
  8. G O for TRB BT asst examination will dispose by August 2023

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி