பள்ளி கல்வி வளர்ச்சி தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் உரையாடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2023

பள்ளி கல்வி வளர்ச்சி தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் உரையாடல்

 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் கலந்துரையாடினார்.

 

இதில் 75 சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்று பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி வளர்ச்சிக்கான கருத்துகள், சங்கங்களின் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று நடந்தது.


 இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் நாகராஜ முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு சங்கங்களில் இருந்து வந்திருந்தவர்களை ஒவ்வொரு பணியின் வாரியாக பிரித்து தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுமார் 75 சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடி அவர்களின் குறைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தார்.

9 comments:

 1. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் விட்டுடிங்க..

   Delete
 2. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

  ReplyDelete
 3. கவனத்திற்கு சென்று ,கவனிக்கமாட்டாங்க...

  ReplyDelete
  Replies
  1. adutha govt than ella pirachanayayum theerthu vaikkum sir, ivangalukku case.gala samaalikave neram podhathu.

   Delete
 4. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ....உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ...😊

  ReplyDelete
 5. விடியட்டும

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி