தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2023

தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ்

கேரளா போன்று தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளைவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், கோடைவெயில் இன்னும் குறையாததால் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு குடிநீர் தர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு பள்ளிகளில் ஒவ்வொரு இடைவேளையின் போதும் வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர். மேலும், இந்த திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

3 comments:

  1. எம்மாடியோ எவ்வளவு பெரிய‌ அறிவிப்பு 😡😡😡😡😡

    ReplyDelete
  2. Eppadi ippadi yosanai itharku pathil teacher posting poduvathil yosikkalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி