‘கணவன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது!’ - சென்னை உயர் நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2023

‘கணவன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது!’ - சென்னை உயர் நீதிமன்றம்

 

வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி கணவன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “கணவன் சம்பாதிப்பது என்பதும், மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனிப்பது என்ற இரண்டுமே பொதுவானது தான். குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது. இதனால் கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது” எனத் தெரிவித்தார்.


மேலும் “குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும் விடுமுறையில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் ஒரு பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது” என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


‘மனைவியின் பங்களிப்பை அங்கீகரிக்க சட்டம் இல்லை! அதே போல நிராகரிக்கவும் சட்டம் இல்லை!’

கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள் எனக் குறிப்பிட்ட நீதிபதி, “கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி தன் பங்களிப்பை வழங்குகிறார். ஆக, கணவன் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது” என உத்தரவிட்டுள்ளார்.


குடும்பத்தை கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்த பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. அதைபோலவே கணவர் வாங்கும் கடனில் மனைவிக்கும் பொறுப்பு உண்டா யுவர்ஆனர்

    ReplyDelete
  2. மற்றவை எல்லாம் அப்புறம் கிழிங்க.முதலில் அநீதிக்கு மனசாட்சியோடு நீதி தேவதை எண்ணி நீதி வழங்கு.11 வருடம் பகுதி நேர ஆசிரியர்கள் "பணிநிரந்தரம்" இன்றி பணியாற்றி வருகிறோம்.முதல்வர் கூறினார் தந்தை தன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று அப்படி"தந்தை சொல் மிக்க மந்திரம்"போல் நடப்பவராக இருந்தால் கருணாநிதி இருக்கும் போதும் இல்லாத போதும் சரி தேர்தல் வாக்கில் கூறியதுப்போல் எங்களை "பணிநிரந்தரம்" செய்து அரசு ஆணை வழங்க சொல்லுங்கள்.😠😠😠😡😡😡😡

    ReplyDelete
    Replies
    1. நீங்க எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தீர்கள்.. அப்புறம் ஏன் இந்த வெற்று கூச்சல்..

      Delete
    2. நீங்களாவது 11 வருடம் பணியாற்றி வருகிறீர்கள், இங்கே பல லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் கொத்தடிமைகளாக 25 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள், அவர்களின் நிலைமை ? கொத்தடிமையாகவே சாவது தானே .

      Delete
  3. மாண்புமிகு நீதிபதி தான் ஒரு பழைய ஆள் என்பதை நிரூபித்து விட்டார், வீடு என்றால், வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள், குழந்தைகள் இருக்கும் , அந்த வீட்டுக்குரிய அனைத்து வேலைகளையும் மனைவி ஒருவர்தான் பார்ப்பார் என்று அவர் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது வியப்பளிக்கிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி