வேளாண்மை, மீன்வளப் பல்கலை.களில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2023

வேளாண்மை, மீன்வளப் பல்கலை.களில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

 

நடப்புக் கல்வியாண்டில், வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிக்க நாளை (ஜூன் 9) கடைசி நாள் ஆகும்.


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொது மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன.


வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில் வேளாண் பல்கலைக் கழகத்தின் 14 பட்டப்படிப்புகளுக்கும், 3 பட்டயப் படிப்புகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 6 பட்டப் படிப்புகளுக்கும், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


இது தொடர்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘இதுவரை 34 ஆயிரம் விணணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி