அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2023

அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு!

 

தமிழ்நாடு அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமைக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 


கரோனா தொற்றுக்கு பெற்றோர் இரண்டு பேரையும் இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 


அரசாணையில், அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கரோனா தொற்றுக்கு பெற்றோர் இருவரையும் இழந்து தேர்ச்சி பெற்றவர்கள்,  தமிழ்நாடு அரசுப் பள்ளியில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவதற்கான விளக்கமான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

1 comment:

  1. அரசு பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.தமிழக அரசு தானே ஆங்கில வழி கல்வி அரசு பள்ளியில் கொண்டு வந்தார்கள்.அப்புறம்ஏன் இந்த பாரபட்சம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி