கவர்னர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2023

கவர்னர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தமிழக கவர்னர் மாளிகை சார்பில், சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில், 2023ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.


தேர்வு செய்யப்படுவோருக்கு, 2024 குடியரசு தினத்தன்று, கவர்னர் மாளிகையில் பாராட்டு சான்று மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப, இம்மாதம் 31ம் தேதி கடைசி நாள்.


ஒவ்வொரு பிரிவிலும், ஒரு நிறுவனம் மற்றும் மூன்று தனி நபர் தேர்வு செய்யப்படுவர். நிறுவனத்துக்கு விருதுடன், ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கு விருதுடன், இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


தனி நபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பரிந்துரைக்கப்படலாம்.


தமிழக அரசு செயலர் அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரி, மத்திய அரசு இணை செயலர் அல்லது அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரி, ஓய்வு பெற்றவர்கள், துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள், கலெக்டர்கள் பரிந்துரைக்கலாம்.


விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை, www.tnrajbhavan.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை,awardsrajbhavantamilnadu@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.


கவர்னரின் துணை செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், கவர்னர் செயலகம், கவர்னர் மாளிகை, கிண்டி, சென்னை - 600022 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி