Jul 29, 2023
Home
Anbil magesh poiya mozhi minister
ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
கொரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயிற்சி அளித்தார்.
தற்போது அதில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் சிலர் ரஷியாவில் உள்ள "யூரி ககாரின்" விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட இருக்கின்றனர். ரஷிய விண்வெளி ஏவுதளத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 50 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மைய வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவுக்கு ரஷியா அதிக உதவிகள் செய்துள்ளது. அங்கு நம் பள்ளி மாணவர்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவைகளை கற்றுக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
விஞ்ஞானி சிவதானு பிள்ளை போல் பலர் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் நிலையில் அரசு சார்பிலும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
ஆசிரியர் சங்கங்களுடன் தனித்தனியாக பேசி இருக்கிறோம். அவர்களின் 10 கோரிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சருடன் பேச இருந்தோம். ஆனால் முதல்-அமைச்சருடன் அவர் சந்திக்க வேண்டியிருந்ததால், எங்களுடைய சந்திப்பு தள்ளிப்போனது.
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோதுகூட நிதி அமைச்சரிடம் அது பற்றி பேசியிருக்கிறேன். அவர் சென்னை வந்த பிறகு, நானும், எங்கள் துறை முதன்மைச்செயலாளரும் இணைந்து பேசி முதலில் எந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது என்பது பற்றி ஆலோசித்து, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
ஆசிரியர் பணியிடங்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்புகள் வர உள்ளது. மிக விரைவில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நல்ல விஷயத்தில்...
இதையடுத்து அவரிடம், 'தமிழ்நாட்டின் கல்வித்துறை சி.ஆர்.எஸ். நிதியையும், மத்திய அரசு கொடுக்கும் நிதியையும் சரியாக பயன்படுத்துவதில்லை என்று கவர்னர் கூறியிருக்கிறாரே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை அதிகளவில் நல்ல விஷயத்தில் பயன்படுத்தக்கூடிய துறை பள்ளிக்கல்வித்துறைதான். கவர்னர் எதில் சரியாக நிதியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டு சொன்னால், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல், சி.ஆர்.எஸ். செயல்பாட்டை பொறுத்தவரையில், நல்ல விஷயத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் அது. நல்ல விதத்தில் அது பயன்படும்' என்றார்
Recommanded News
Tags # Anbil magesh poiya mozhi ministerRelated Post:
Anbil magesh poiya mozhi minister
11 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
சென்னைக்கு மிக அருகில் வீட்டு மனை என்பதும்... மிக விரைவில் ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்பதும் ஒன்றுதான்... எவ்வளவு காலம் இதையே சொல்லுவார்கள் தெரியவில்லை.
ReplyDeleteதலைப்பு போட்ட பாரு சூப்புரு....
ReplyDeleteவிரைவில் போய் இப்போது மிக விரைவில் வந்துள்ளது அவ்வளவு தான் வேறொன்றும் வித்தியாசம் இல்லை....
ReplyDeleteஅதே போல் மிக விரைவில் திமுக மண்ணை கவ்வும் நாட்கள் நெருங்கி விட்டது....
அரசியல்வாதிகளின் பிள்ளைகள், அதுவும் பதவியில் இருக்கும் ஒருவரது பிள்ளை இப்படி படிச்சிட்டு வேலை கிடைக்காமல், வயதும் அதிகமாகி திண்டாடிய வரலாறு உண்டா ? அப்படி நிலைமை இந்தியாவிலேயே கிடையாது, அதனாலதான் படிப்பை பற்றி சிந்திக்காதவனையும், படிப்பறிவு இல்லாதவனை அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும் நிலை இருக்கும்போது, ஆசிரியர் வேலை கானல் நீர்தான். இது போதாக்குறைக்கு வழக்கு, ஒரு வழக்கு முடிய 3வயது கூடிவிடுகிறது, எல்லாத்தையும் சமாளிக்கலாம்னா, ஊழல், காச வாங்கிட்டு போஸ்டிங் போட்டுவிடறானுங்க, நாசமா போகட்டும் இந்த நாடும் நாட்டு மக்களும்.
ReplyDeleteநாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கட்டும் படிச்ச படிப்புக்கு வேலை தராத அரசியல்வாதி பிள்ளைகள் நாசமா போகட்டும். அவங்க பசங்க வாழா வெட்டி ஆகட்டும் பொண்ணுங்க டிவோர்ஸ் ஆகட்டும் பொண்டாட்டி வேற யார் கூடன்னா தற்காலிகமா வாழட்டும்னு சாபம் விடாதீங்க
DeleteChennaiku miga arugil cyclone.....
ReplyDeleteபார்லிமென்ட் எலக்சன்ல திமுகவிற்கு தக்க பதிலடி தர வேண்டும்
ReplyDeleteஉண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா. லட்சக்கணக்கான ஆசிரியர் பட்டதாரிகள் இருக்கிறார்கள். பணியிடங்களின் நிரப்புவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உங்க வீட்டு காசையா சம்பளமா குடுக்க போறீங்க மாணவர்கள் மேல சுத்தமா அக்கறையே கிடையாது. நீங்கள் ஆட்சிக்கு வந்து ஒரே ஒரு ஆசிரியர் கூட நிரந்தர பணியிடத்தை நிரப்ப வில்லை இதற்கான பலனை நீங்களும் மிக விரைவில் அனுபவிப்பீர்கள்
ReplyDeleteஒரே நாடு ஒரே தேர்தல்.. . தமிழ் நாட்டில் ஆட்சி கலைத்து புதிய தேர்தல் வைக்க வேண்டும்
DeleteAthan temporary teachers potangalae. Apuram ethuku vera appointment.. ipadiyae intha aatchiya otitu adutha vara chief minister kita vacancy podalanu DMK porattam Pannu. Itha nampi again intha aasiriyar kootam DMK ku vote potu win panna vikkum.
ReplyDeleteலகுட பாண்டி 😆😆
ReplyDelete