TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டம் ( 28.07.2023 ) - ஆர்ப்பாட்ட அழைப்பிதழ்! !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2023

TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டம் ( 28.07.2023 ) - ஆர்ப்பாட்ட அழைப்பிதழ்! !!


காலம் தாழ்த்தாமல் எங்களின் கீழ்காணும் வாழ்வாதாரக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசையும் , பள்ளிக்கல்வித் துறையையும் வற்புறுத்துவதற்காக 28.07.2023 வெள்ளிக்கிழமை காலை - -2 மிகச்சரியாக 11 மணிக்கு , சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்.


 அந்த மகத்தான ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஆசிரியச் சமுதாயமே அணி திரண்டு வருக ! ஆர்ப்பரித்து வருக , ஆவேசக் குரல் எழுப்பி , ஆவேசமாய் வருக ! அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் , தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அணி திரட்டி வருக என உங்கள் அனைவரையும் ஜேக்டோ சார்பில் இருகரம் கூப்பி அழைக்கின்றோம் வாரீர்.

ஜேக்டோ ஆர்பாட்ட அறிக்கை 18.7.23 - Download here...


5 comments:

  1. நீங்கள் எவ்வளவு பெரிய போராட்டம் நடத்தினாலும் இந்த அரசு உங்களுக்கு செவி சாய்க்க போவதில்லை. வேலை விட்டு நீக்கி விடுவோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் அனைத்து கூட்டங்களும் அன்றே காணாமல் போய் விடும். இதற்கு எதற்க்கு போராட்டம்?

    ReplyDelete
  2. Admk ஆட்சி நடந்தா அடங்கிப்போய் கிடக்கிறது...திமுக ஆட்சிக்கு வந்தா போராட்டமோ போராட்டம் தான்....பொதுமக்கள் இடையே ஆசிரியர் சமூகத்தின் பார்வை கேவலமாக உள்ளது..

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள்,
      ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்,
      ஒரு சமூக அக்கறை இல்லாத, சுய நலம் கொண்ட மனித கூட்டம் என்று மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்

      Delete
  3. ஆட்சியாளர்கள் உங்களை சசம்பளம் வாங்குரால செய் என்று நினைக்கிறார்கள். மாணவர்கள் உங்களை ஜோக்கர் என்று நினைக்கிறார்கள். இந்த சமூகம் உங்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என்று நினைக்கிறார்கள். இதை எல்லாம் முதலில் மாற்றுங்கள். பின்பு உங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த சமூகம் குரல் கொடுக்கும். உங்கள் கோரிக்கை பட்டியலில் மாணவர்கள் நலன் சார்ந்தோ அல்லது இந்த தலைமுறை மாணவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி நடைமுறை அறிவுறுத்த ஏதேனும் இருக்கின்றதா ? எல்லாமே உங்கள் சம்பளம் மற்றும் பதவி உயர்வு மட்டும் தான். இதற்கு இந்த அரசும் மற்றும் இந்த சமூகமும் உங்களுக்காக ஒரு போதும் செவி சாய்க்காது

    ReplyDelete
  4. மிக சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி