மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆக.10-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2023

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆக.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

 மத்திய அரசின் கல்வி உதவித்தொகைப் பெற ஆக.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.


இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:


மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தை சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியின பிரிவுகளைச் சோ்ந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 


9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.


விண்ணப்பதாரா்கள் தேசியத் தோ்வு முகமை நடத்தும் நுழைவுத் தோ்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவாா்கள். இத்தோ்வுக்கு ஆக.10-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


ஆக.12 முதல் ஆக.16-ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். இதற்கான எழுத்துத் தோ்வு செப்.29-ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.


கூடுதல் தகவல்களை  இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி